ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021
காஞ்சிபுரம் சாலியர் தெரு
பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரத்தில் , நமது நமது சாலியர்கள் வாழ்ந்ததன் அடையாளமாக ஷேக் பேட்டை என்ற இடத்தில் "சாலியர் தெரு" என்ற பெயரில் இன்றும் ஒரு தெரு உள்ளது. இது தற்போதைய காஞ்சி நகரத்தில் முக்கியமான பகுதியும் கூட. இது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயமும் கூட
லேபிள்கள்:saliyar ,padma saliyar ,
காஞ்சிபுரம் சாலியர்
தேசியக்கொடியும் பத்மசாலியரும்
நம் நாட்டில் முதலில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி நம் பத்மசாலியர் சமூகத்தை சார்ந்த திரு. கோட்ட வெங்கடாசலதி அவர்களால் பறக்கவிடப்பட்டது என்பதனை பெருமையுடன் நினைவு கூருவோம். வரலாற்றில் தடம் பதித்த நாம் பெருமை கொள்வோம்.
Saliya Maharishi
லேபிள்கள்:saliyar ,padma saliyar ,
சாலியர் பத்மசாலியர் அறுவையர் saliya saliyar
அறுவையர்
'அறுவை’ என்ற பெயரால் தமிழில் துணி குறிப்பிடப்பட்டுள்ளது. அழகர் மலையில் காணப் படும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக் காலத்திய தொல் தமிழ் (பிராமி) கல்வெட்டில் ‘அறுவை வணிகன்’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் துணி வணிகத்தின் தொன்மையை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. இளவேட்டனார் என்ற சங்க காலக் கவிஞர் ‘அறுவை வணிகர்’ என்ற அடை மொழியினால் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சாலியர் குலத்தை அறுவையர் குலம் என்றும் பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடவியார் என்பதும் சாலியரின் பட்டமேயாகும்
லேபிள்கள்:saliyar ,padma saliyar ,
சாலியர் பத்மசாலியர் அறுவையர் Saliyar saliya
சத்திரப்பட்டி சாலியர் முளைக்கொட்டுத் திருவிழா
பல நூற்றாண்டுகளாக நமது சத்திரப்பட்டியில் கொண்டாடப்பட்டு வரும் முளைக்கொட்டு திருவிழா இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஆடி 13 (29.7.18) அன்று முளைத்தாண்டுதல் என்னும் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முளைப்பாரி வளர்ப்பு நிகழ்ச்சி பக்தியுடன் தொடங்கிற்று. அதைத் தொடர்ந்து அடுத்து வந்த நாட்களில் சத்திரப்பட்டியின் நான்கு தெருக்களிலும் முளைக்கொட்டு வாசலின் முன்பு தாய்மார்களின் கும்மிப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
7.8.2018 அன்று முளைக்கொட்டு திருவிழா இனிதே துவங்கியது. அன்றிரவு அம்மன் சப்பர வீதியுலா ஒவ்வொரு தெருவின் சார்பிலும், அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. முளைக்கொட்டு விழாவின் அனைத்து தெரு மின் விளக்கு உபயம் சத்திரப்பட்டி ஆறுமுகா குரூப் முதலாளி உயர்திரு ஆறுமுகம் ஐயா அவர்கள்.
அதைத் தொடர்ந்து மறுநாள் காலை முளைப்பாரி வீதி உலா வந்து அந்தந்தத் தெருக்களில் பந்தலில் அம்மன் முன் சமர்ப்பிக்கப்பட்டு வணங்கப்பட்டது. தொடந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து பல்வேறு நேர்த்திக்கடன்களும் மக்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
அன்று மாலை பேண்ட் வாத்திய கச்சேரியுடன் முளைப்பாரி விதி உலாவந்து சத்திரப்பட்டி துரைமடம் விநாயகர் கோவில் அருகிலுள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது. அன்று முழுதும் சத்திரப்பட்டியில் விழாவைக் காணவரும் பக்தர்களுக்காக சதுரகிரி காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தின் மூலம் அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்றிரவு அம்மன் சப்பர வீதி உலா நடைபெற்றது.
மறுநாள் வியாழனன்று இரவு நடுத்தெரு விழாப்பந்தலில் வைத்து நமது ஏழூர் சாலியர் மகாஜன சங்கத்தின் சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இரவு அம்மன் அலங்காரச் சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
-சாலியர் மலர் பத்திரிக்கைக்காக அடியேன் எழுதிய கட்டுரை. 26 ஆகஸ்ட் 2018 இல்
லேபிள்கள்:saliyar ,padma saliyar ,
saliya saliyar சாலியர்
கைத்தறித் துணிகளில் அச்சுப்பதித்தல்
துணிகளில் உருவங்கள் அல்லது ஓவியங்கள் பதிக்கும் தொழில்நுட்பமும் வழக்கில் இருந்துள்ளது. கி.பி. 1001ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டில் அச்சுத்தறி என்ற சொல்லாட்சி இடம்பெற்றுள்ளது.
இதில் அச்சு என்பது அச்சிடலையும் தறி என்பது துணியையும் குறிக்கிறது.
லேபிள்கள்:saliyar ,padma saliyar ,
சாலியர் பத்மசாலியர் saliya saliyar
நெசவு தொழில்நுட்பம்
சோறு வடித்த கஞ்சித் தண்ணீரைப் பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்குப் பசையாகப் போடுவதையும் நறுமணப் புகையூட்டுவதையும் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் சாயங்கள் துணிகளுக்குத் தோய்க்கப்பட்டன.
குசும்பா எனப்படும் சிவப்பு நிற மலரிலிருந்து சிவப்பு நிறச்சாயம் தயாரிக்கப்பட்டது. தொடக்கத்தில் துணி தயாரிப்புடன் இணைந்திருந்த சாயமேற்றல் பின்னர் தனித்ததொரு தொழிலாக உருவெடுத்தது.
சிவப்பூட்டியோர் என்றழைக்கப்பட்ட சாய மேற்றுவோர் மீது வரி விதிக்கப்பட்ட செய்தியை 1223 ஆம் ஆண்டு திருவொற்றியூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது
லேபிள்கள்:saliyar ,padma saliyar ,
சாலியர் saliyar saliya
சாலியரும் கைக்கோளரும்
நெசவு என்ற தொழிலுக்கு சாலியர் என்ற பெயர் மட்டுமே பழங்கால கல்வெட்டுகளில் உள்ளது.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான கல்வெட்டுக்களில் கூட நெசவுத் தொழிலுடன் தொடர்புடையதாக கைக்கோளர் சமூகம் குறிப்பிடப்படவில்லை.
சுந்தரபாண்டியனின் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் இவர்கள் மீதான தறிஇறை (நெசவுத் தொழிலுக்கான வரி) குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் நெசவுத் தொழிலுடன் இச்சமூகத்தைத் தொடர்புபடுத்தும் பழமையான கல்வெட்டாகும். இதுபோன்ற வரியுடன் கைக்கோளர்களைத் தொடர்பு படுத்தும் பதினான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு சம்புவராயர் ஆட்சிக் காலத்தியதாகும்.
லேபிள்கள்:saliyar ,padma saliyar ,
சாலியர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)