திங்கள், 12 டிசம்பர், 2016

சாலியரும் தறி ரகங்களும்

40,60,80,100 ஆம் நம்பர் நூலில் நெய்யும் துணிகள் நைஸ் வேட்டி என்பார்கள். இந்தத் துணி நெய்யும் தறி நைஸ்த்தறி எனப்படும். 20, 26 ரக நூல் நெய்யும் தறிகள் கைத்தறி எனப்படும்.

பாவு இழையின் நெருக்கத்தையும் , கலக்கமாய் இருப்பதையும் பண் என்பார்கள். அதாவது ஒரு அங்குலத்துக்கு 44 இழைகள் இருந்தால் 44 இழைப் பண்ணில் நெய்தது எனப்படும்.
இந்த அளவைச் சரிபார்க்க தற்போது ஊடைக் கண்ணாடி பயன்படுத்தப் படுகிறது.



முற்காலத்தில் இதற்கு முக்கால் துட்டு அல்லது காலணா வைத்து அதன் மேல் இருக்கும் நூல் எண்ணப்படும். முக்கால் துட்டு 1 அங்குல விட்டமுடையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar