ஞாயிறு, 31 மே, 2015

சாலியர் வரலாறு 10

சாலிய மஹரிஷி »

சாலியர்களின் குல முதல்வர் சாலிய மஹரிஷி ஆவார் .இவர் விசாக மஹரிஷியிடம் சிஷ்யராக இருந்ததாகவும் ,பின்னர் சாலிய மஹரிஷி என்று அழைக்கப்பட்டதாகவும் தஞ்சை மாவட்டம் நல்லாடை தலபுராணம் கூறுகிறது .சாலிய மஹரிஷிக்கு இரண்டு மனைவியர் என்றும் ,முதல் மனைவி வழி வந்தவர்கள் ,சாலியர் என்றும் ;இரண்டாம் மனைவி வழி வந்தவர்கள் மொட்டை சாலியர் என்றும் அழைக்க ப்படுவார்கள் .
பத்ம சாலியர்கள் தங்கள் குல தெய்வமாக மார்கண்டேய மஹரிஷியை கூறுகின்றனர் .

சாலியர் வரலாறு 9

தமிழக சாலியர்களின் பூர்வீக வரலாறு :»
தமிழக சாலியர்களின் பூர்வீகம் குஜராத் மாநிலம் சௌராஷ்டிரம் ஆகும் .அன்னிய படையெடுப்பால் துன்புற்று தெற்கு நோக்கி நகர்ந்தனர் .வரும் வழியில் ஆந்திரா ,கர்நாடகா ,கேரளா போன்ற இடங்களில் அந்தந்த பகுதி மொழி பேசி வாழ்ந்துவருகின்றனர் .இவர்கள் தற்போது பத்மசாலியர் மற்றும் சாலியர் என்ற பெயரோடு வாழ்கின்றனர் .தமிழக பகுதிக்கு வந்த சாலியர்கள் சுமார் ,1640ம் வருஷம் சுமார் 400 குடும்பங்கள் குடியேறி தறி நெசவு செய்தார்கள் .எனவே அவ்விடம் "சின்னத் தறிப்பேட்டை" என்ற பெயரில் அழைக்கப்பட்டது .பின்னர் நாளடைவில் மருவி சிந்தாதிரிபேட்டை என தற்போது அழைக்கப்படுகிறது .ஆதாரம் »சென்னை மாநகராட்சி ஆவணங்கள் ...அதன்படி சென்னையின் பூர்வீக குடிமக்கள் சாலியரே ஆகும்.பூர்வீக மொழி சௌராஷ்டிரம் .