வெள்ளி, 26 ஜூன், 2009

சாலியர் வரலாறு 6

பட்டு நெசவு :- உலகிலேயே பட்டு உற்பத்தி செய்யப்பட்டது சீனாவில் என்பது வரலாறு . அக்காலத்தில் இந்தியனை மணந்த சீனப்பெண் தன்னுடைய கூந்தலில் பட்டு பூச்சியை கொண்டு வந்து , இந்தியாவில் பரப்பியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன . தமிழகத்தில் கி .பி . நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் திருகாம்பூரில் பட்டு நூல் கட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாம் . பாட்டின் தோற்றம் கி .மு . இரண்டாயிரத்து அறுநூற்று நாற்பது என்று கருதப்படுகிறது . சீனாவில் பரவிய பட்டு அஸ்ஸாம் , காஷ்மீர் , வங்காளத்தில் பரவியது . பின்னர் பட்டு புழுக்கள் கர்நாடகத்தில் வளர்க்கப்பட்டது . அங்குள்ள தட்ப வெப்ப நிலை , மண்ணின் தன்மை , பட்டுவளர்வதற்கு மிகவும் சாதகமாக இருந்ததால் கர்நாடகாவில் பட்டு நெசவு மிகவும் வேகமாக பரவியது . [ ஆதாரம் :- சாலியர் குரல் ] கி .பி . தொளாயிரத்து எண்பத்து ஐந்தில் தமிழகத்தில் ராஜ ராஜ சோழன் காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்தது . தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் ராஜராஜன் தன் மனைவியருடன் பட்டாடையில் , சிதம்பரம் நடராஜரை காணும் ழிபடுவதான காட்சி இன்றளவும் காணப்படுவதாக கூறப்படுகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar