வெள்ளி, 26 ஜூன், 2009

சாலியர் வரலாறு 7

கைத்தறி நெசவாளர்கள் :- பங்கர் , சோரியர் , தன்லி , பட்வா , பட்டுநூல்காரர் மற்றும் சாலி என்பவை நம் நாட்டின் கைத்தறி நெசவாளர்களின் பெயர்களாகும் . முதல் இரண்டு சாதிகள் '' நூல் இழைகளை ஒன்று சேர்த்தல் '' என்ற பொருளில் அமைந்தது . மற்ற பெயர்கள் '' பட்டு ஆடை '' என்பதன் சம்ஸ்கிருத வார்த்தையாகும் . காஞ்சிபுரத்தில் முன்பு வாழ்ந்த சாலியர்கள் ; சாலியர் , பட்டசாலியர், அதாவது பட்டாலியர் என்றும், அழைக்கப்பட்டனர் . பழைய ஆனந்தவிகடன் அகராதியில் , பட்டாரியன் என்ற வார்த்தைக்கு - பட்டாடை நெய்யும் தமிழ் சாலியன் என்றும் அர்த்தம் குறிப்பட பட்டிருக்கிறது . இது பற்றி பின்னர் விரிவாக கூறப்படும் . தமிழக அரசு உத்தரவு ஆயிரத்து ஐநூற்று அறுபத்து எழு / சமூக நலத்துறை தேதி முப்பது , எழு , எண்பத்து ஐந்தில் , வரிசை எண் நூற்று ஐம்பத்து நான்கில் கீழ்க்கண்ட ஜாதிகளை ஒரே பிரிவில் கூறப்படுகிறது . ௧]சாலியர்,௨]பத்ம சாலியர் ,௩]பட்டு சாலியர் , ௪ ] அடவியார் , ௫] பட்டரியார் . மத்திய அரசின் ஓ.பி.சி . பட்டியலில் நூற்று முப்பத்து ஒன்றில் குறிப்பிடப்படுகிறது . இதில் பட்டாரியார் , அடவியார் இரண்டும் ஒரே ஜாதியை சார்ந்தது . அடவியார் என்பது பட்டாரியர்களின் பட்டமாகும் . அரசு உத்தரவில் கூறப்பட்ட படி பட்டு சாலியர் , சாலியர் , பத்ம சாலியர் ,பட்டாரியார் முதலானவர்கள் ஒரே பிரிவில் தொன்று தொட்டு வந்துள்ளனர் . பட்டு சாலியர் என்பவர்கள் பத்ம சாலியரின் உட்பிரிவுதான் என கூறப்படுகிறது . இருவரும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் . சாலியர் , பட்டாரியார் இருவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் .

சாலியர் வரலாறு 6

பட்டு நெசவு :- உலகிலேயே பட்டு உற்பத்தி செய்யப்பட்டது சீனாவில் என்பது வரலாறு . அக்காலத்தில் இந்தியனை மணந்த சீனப்பெண் தன்னுடைய கூந்தலில் பட்டு பூச்சியை கொண்டு வந்து , இந்தியாவில் பரப்பியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன . தமிழகத்தில் கி .பி . நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் திருகாம்பூரில் பட்டு நூல் கட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாம் . பாட்டின் தோற்றம் கி .மு . இரண்டாயிரத்து அறுநூற்று நாற்பது என்று கருதப்படுகிறது . சீனாவில் பரவிய பட்டு அஸ்ஸாம் , காஷ்மீர் , வங்காளத்தில் பரவியது . பின்னர் பட்டு புழுக்கள் கர்நாடகத்தில் வளர்க்கப்பட்டது . அங்குள்ள தட்ப வெப்ப நிலை , மண்ணின் தன்மை , பட்டுவளர்வதற்கு மிகவும் சாதகமாக இருந்ததால் கர்நாடகாவில் பட்டு நெசவு மிகவும் வேகமாக பரவியது . [ ஆதாரம் :- சாலியர் குரல் ] கி .பி . தொளாயிரத்து எண்பத்து ஐந்தில் தமிழகத்தில் ராஜ ராஜ சோழன் காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்தது . தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் ராஜராஜன் தன் மனைவியருடன் பட்டாடையில் , சிதம்பரம் நடராஜரை காணும் ழிபடுவதான காட்சி இன்றளவும் காணப்படுவதாக கூறப்படுகிறது .

சாலியர் வரலாறு 5

நெசவு தொழில் தொடர்ச்சி :- தோல் பெரும் ஆய்வுகள் பருத்தி இந்தியாவை சார்ந்தது என்று உறுதியாகக் கூறுகின்றன . சுமார் ஆயிரத்து நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சோழ நாட்டின் வணிகம் அளவில் விரிந்தும் வருமானத்தில் சிறந்தும் காணப்பட்டது . உரோமப் பேரரசின் செல்வம் ஆண்டு ஒன்றுக்கு அறுநூற்று ஐம்பது மில்லியன் காசுகள் இந்தியாவுக்கு செல்கின்றது என்று ரோமாபுரி எழுத்தாளர் பிளினி கூறுகிறார் . பிளினியின் காலம் கி . பி . எழுபத்து ஏழு. உறையூரில் முன்காலத்தில் நெசவுத் தொழிலுக்கு சாயமிடும் தொட்டி காணப்பட்டது என்று கூறப்படுகிறது . உறையூரில் நெசவு செய்யப்பட சேலைகள் ஒரு தேங்காய் மூடியில் அடைக்க கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்ததாக கூறப்படுகிறது . பட்டு நெசவு பற்றி பின்னர் கூறப்படும் .......

புதன், 24 ஜூன், 2009

சாலியர் வரலாறு 4

நெசவுத்தொழில் :- தமிழகத்தில் பலநூற்றாண்டுகளாக நெசவு தொழில் மிக அதிகமாக செய்யப் பட்டு வருகிறது .சங்க காலம் முதலாகவே நம் நாடு நெசவு தொழிலில் சிறந்தவர்கள் . இந்தியாவின் ஆதிவாசியினர் பழங்குடியினரே என்று கூறப்படுகிறது . கி.மு. இரண்டாயிரத்து முன்னூற்று மூன்று என்ற அளவில் சிந்து வெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிகப் பொருட்களில் பருத்தியும் ஒன்று என சுமேரியன் கையெழுத்து படிமங்கள் கூறுகிறது .கூறுகின்றன.கூழ்ர்

சாலியர் வரலாறு 3

சாலியர்கள் அந்நிய ஆதிக்கத்தில் சிரமப்பட்ட காரணத்தால் காஞ்சிபுரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் . அவர்கள் வரும்போது தாங்கள் வணங்கி வந்த பிள்ளையார் சிலையை தூக்கி கொண்டு வந்தனர் . அவர்கள் தூக்கி கொண்டு வந்த விநாயகர் சிலை இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் காணப்படுகிறது என்று கூறப்பட்கிறது . இவர்கள் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கூட ''பூணூல்'' அணிந்து வந்தவர்கள் . நாளடைவில் அப்பழக்கம் மறைந்து தற்போது முழுமையாய் மறைந்து விட்டது . சாலியர்கள் மயிலாடுதுறை பகுதியிலும் வாழ்ந்து வருகிறார்கள் . சாலியர்கள் தூக்கிவந்த விநாயகர் சிலை ஶ்ரீவில்லிபுத்தூரில் வடக்கு ரதவீதியின் முடிவில் தேர் திரும்பும் முன் வடம் மட்டும் ஒரு சிறிய தெருவில் போகும் .அத்தெருவில் "புழுங்கல் அரிசி பிள்ளையார் அல்லது புழுங்கல் வாரி பிள்ளையார் " என்ற பெயரில் சிறு கோவில் கொண்டு இருக்கிறார் .

செவ்வாய், 23 ஜூன், 2009

சாலியர் வரலாறு 2

இவர்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறார்கள் . குறிப்பாக தேனீ மாவட்டம் ஆண்டிபட்டி , சக்கம்பட்டி ,விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் , முகவூர் , சத்திரபட்டி, சமுசிகாபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் ,சுந்தரபாண்டியபுரம் , பட்டி , வடசேரி [ நாகர் கோவில் ] , மாயவரம் , மணமேடு [ திருச்சி ] போன்ற இடங்களில் இருக்கிறார்கள் . பலவித குலதெய்வங்களை வணங்கி வருகிறார்கள் . இவர்கள் சாலிய மகரிஷி கோத்திரத்தை சேர்ந்தவர்கள் .

சாலியர் வரலாறு 1


சாலியர்கள் நெசவு தொழில் செய்து வரும் குலமக்கள் . இவர்கள் பாரதம் முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள் . குறிப்பாக தமிழ்நாடு , கேரளா ,கர்நாடகா,ஆந்திரா போன்ற பகுதிகளில் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள் .தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் பத்ம சாலியர் என்ற பெயர்களில் அழைக்க படுகிறார்கள் . பாரத பெருமைகளை போற்றி வளர்ப்பவர்கள் . தெய்வ பக்தி நிரம்பியவர்கள் . உலகத்துக்கே உடை கொடுத்த உன்னத பரம்பரையை சார்ந்தவர்கள் .இவர்களது வரலாறு இனி தொடர்ந்து கூறப்படும் .